உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரியாணி கடை பிளக்சால் டிரான்ஸ்பார்மருக்கு ஆபத்து

பிரியாணி கடை பிளக்சால் டிரான்ஸ்பார்மருக்கு ஆபத்து

கோபி,:கோபி கச்சேரிமேடு பிரிவில் மின் இணைப்பு மாற்றி கம்பத்தில் இருந்து, அரசு மருத்துவமனை மற்றும் அதன் வழியாக வாய்க்கால்ரோடு வரை, 2,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் பிரியாணி கடை பிளக்ஸ் பேனரை கட்டியுள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்யும் சூழலில், இந்த பிளக்ஸ் பேனரால் மின்கசிவு போன்ற சூழலில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை மின்வாரிய பொறியாளர்கள் கண்டுகொள்ளாதது ஆச்சர்யமாக உள்ளது. இதேபோல் கோபி டவுனில் பெரும்பாலான மின் கம்பங்களில், விளம்பர பிளக்ஸ் பேனர் ஆக்கிரமித்துள்ளது. மழை காலத்தை கருத்தில் கொண்டு, விபத்து நடக்கும் முன், கம்பங்களை ஆக்கிரமித்துள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை