உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமூக வலைதளத்தில் அவதுாறு பதிவு பா.ஜ., மகளிரணி எஸ்.பி.,யிடம் மனு

சமூக வலைதளத்தில் அவதுாறு பதிவு பா.ஜ., மகளிரணி எஸ்.பி.,யிடம் மனு

ஈரோடு:ஈரோடு வடக்கு பா.ஜ., மகளிரணி மாவட்ட தலைவர் ரதி தலைமையிலான பெண்கள், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காஷ்மீரில் சில நாட்களுக்கு முன், 27 பேர் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இத்தருணத்தை அரசியலாக்கி, பிரிவினை வாதத்தை துாண்டும் வகையில், தி.க.வை சேர்ந்த சுந்தரவல்லி என்பவர், அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். மத்திய அரசை களங்கப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத அரசியலை கையில் எடுத்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்டுள்ளார். இவரது பின்புலத்தை விசாரித்து இதற்கு பின்னால் இருப்பவர்கள் குறித்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ