/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐகோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் அந்தியூரில் வீடுகளில் ஏறிய கறுப்புக்கொடி
ஐகோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் அந்தியூரில் வீடுகளில் ஏறிய கறுப்புக்கொடி
அந்தியூர், அந்தியூர் அருகே பொய்யேரிக்கரை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மயானத்துக்கு செல்லும் வழியில், தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்றுமாறு, பலகட்ட போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக மூன்றாண்டுக்கு முன், பிரச்னைக்குரிய பகுதியை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனாலும் இதுவரை அந்தியூர் வருவாய் துறையினர், அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமலும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இதை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் நேற்று கறுப்புக்கொடி கட்டியும், கைகளில் கொடிகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.