உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு

காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு

. 19?ஈரோடு, டிச. 19-ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதல்வரின் காலை உணவு திட்டம் மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,079 பள்ளிகளை சேர்ந்த, 51 ஆயிரத்து, 751 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில், 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில், காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் மணிஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை கமிஷனர் மணிஷ் சாப்பிட்டு பார்த்தார். மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை