உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலம் கட்டுமான பணி மெத்தனம்; போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

பாலம் கட்டுமான பணி மெத்தனம்; போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

ஈரோடு: ஈரோடு பி.பி. அக்ராஹாரம் அருகில் உள்ள பவானி மெயின் ரோட்டில், சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: பவானி ரோட்டின் குறுக்கே சாக்கடையை இணைக்கும் விதமாக பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பணி இரண்டாக பிரித்து முதலில் ரோட்டின் ஒரு பக்கமும், பிறகு மறுபக்கமும் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். தற்போது பவானியில் இருந்து ஈரோடு வரும் மார்க்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பணி துவங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் ஒரு பகுதிக்கான பணி கூட முழுமையாக முடியவில்லை. வாகன போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் காலை மற்றும் மாலை நேரத்தில் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், பஸ்சை விட்டு நடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !