உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எஸ்.என்.எல்., மொபைல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர் தவிப்பு

பி.எஸ்.என்.எல்., மொபைல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர் தவிப்பு

காங்கேயம்: காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்., செல்போன் டவர் மூலம் நால்ரோடு, மறவபா-ளையம், திட்டம்பாளையம், சாவடி, மொசுக்குத்திவலசு, ரங்கை-யன்வலசு, அழுக்குத்திவலசு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிரா-மங்களில் வாடிக்கையாளர் பயன் பெற்றனர். ஒரு மாதமாக நால்ரோட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள கிரா-மங்களில் சிக்னல் சரிவர கிடைக்காமல் சீராக போன் பேசமுடி-யாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் மட்டும், 2,௦௦-௦க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிக்னல் பிரச்-னையினால் போன் பேச முடியாமல் பாதித்துள்ளனர். இதனால் பலர் தனியார் நெட்வொர்க்குக்கு மாற முடிவு செய்துள்-ளனர். பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் இந்த கிராம பகுதிகளுக்கு சீரான முறையில் செல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை