உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஈரோடு எம்.எஸ்., சாலையில் டெலிபோன் பவன் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் முகமது ரபீக் தலைமை வகித்தார்.கிளை செயலாளர் சவுந்திரராஜன், ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாலு, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் சையது இத்ரீஸ், ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை