உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதியவர் வீட்டில் திருட்டு

முதியவர் வீட்டில் திருட்டு

காங்கேயம், காங்கேயம் ஊதியூர் அருகே நிழலி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, 70; தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை குண்டடம் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றவர் நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கூரை உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, 25 ஆயிரம் ரூபாய், முக்கால் பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி ஊதியூர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை