உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் ஜப்தி

பவானி: பவானி அருகே கவுந்தப்பாடி புதுார், வள்ளலார் நகரை சேர்ந்-தவர் கார்த்திகேயன், 40; கடந்த, 2012ல் பைக்கில் சென்றபோது, அரசு பஸ் மோதி காயமடைந்தார். பல ஆண்டு சிகிச்சைக்குப் பிறகும் கை, கால் செயலிழந்து, வாய் பேச முடியாமல் உள்ளார். அவர் தொடுத்த வழக்கில், 37.48 லட்சம் ரூபாய் இழப்-பீடு வழங்க, 2018ல் பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்-பீடு வழங்காததால் நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தார். இதைய-டுத்து இழப்பீடு வழங்காத கோவை போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இரு அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்த-ரவிட்டது. இதன்படி பவானி புது பஸ் ஸ்டாண்டில் இருந்த இரண்டு பஸ்களை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ