கிணற்றில் தவறி விழுந்த கன்று பலி
கோபி :ரை சேர்ந்த விவசாயி அர்ஜூனன், 46; இவரின் இரண்டு வயது சிந்து மாட்டின் கன்று குட்டி, வீட்டருகே இருந்த, 120 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை 11:00 மணிக்கு தவறி விழுந்தது. தகவலறிந்த கோபி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். இரண்டு மணி நேரம் போராடி கன்று குட்டியை மீட்டனர். ஆனாலும் கன்றுக்குட்டி இறந்து விட்டது.