உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கே.ஜி.வி.பி., பள்ளியை நடத்த என்.ஜி.ஓ.,க்களுக்கு அழைப்பு

கே.ஜி.வி.பி., பள்ளியை நடத்த என்.ஜி.ஓ.,க்களுக்கு அழைப்பு

ஈரோடு::ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ், சத்தியமங்கலம் யூனியன் வேடர் நகரில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகள் தங்கி கல்வி பயில, கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கே.ஜி.பி.வி.,) பெண்கள் உறைவிட பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு புதிய அரசு சாரா தொண்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள தொண்டு நிறுவனம் மே, 9க்குள் விண்ணப்பிக்கலாம். 'முதன்மை கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாவட்ட திட்ட அலுவலகம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு,' என்ற முகவரியில் விண்ணப்பம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !