உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரம் விழுந்து கார் சேதம்

மரம் விழுந்து கார் சேதம்

ஈரோடு:ஈரோடு, பட்டகாரர் வீதியில் கவிதா என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர்களது வீட்டின் முன்புறம் பலீனோ கார், வேப்பமரத்தின் கீழ் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று காலை 7:40 மணியளவில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது. காரின் மேல்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அறுத்து காரை அப்புறப்படுத்தினர். காருக்குள் யாரும் இல்லாததாலும், மரம் விழுந்த பகுதியில் யாரும் நிற்காததாலும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை