போக்சோ பிரிவில் 2 பேர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு, மரப்பாலம், மொய்தீன் வீதியை சேர்ந்த அகமது பாஷா மகன் அலாவுதீன் பாஷா, 18; ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார். சைல்டு லைன் மூலம் தகவல் அறிந்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர் இதேபோல் திருப்பூரை சேர்ந்த செல்வன் மகன் சஞ்சய், 21, பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். பவானி அனைத்து மகளிர் போலீசார், சஞ்சய் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.