சாலை மறியல் செய்த 10 பேர் மீது வழக்கு
சென்னிமலை, ஈங்கூர் பகுதி மக்கள் சென்னிமலை-பெருந்துறை பிரதான சாலையில், நேற்று முன்தினம் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னிமலை யூனியன், ஈங்கூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன், காந்தி, துரைசாமி, லோகநாதன், நந்தகுமார், புஷ்பநாதன், கிருஷ்ணன் உள்பட, 10 பேர் மீது, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு எற்படுத்தும் வகையிலும், வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.