உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்திய லாரி ஓனர் மீது வழக்கு

கிராவல் மண் கடத்திய லாரி ஓனர் மீது வழக்கு

காங்கேயம், :காங்கேயத்தை அடுத்த நால்ரோட்டை சேர்ந்தவர் ரவி, 45; டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பரஞ்சேர்வழி கிராமம், பள்ளக்காட்டுப்புதுாரில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக, காங்க்யேம் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் அங்கு சென்றபோது, 4 யூனிட் கிராவல் மண்ணுடன் தப்ப முயன்ற லாரியை மடக்கினர். லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிந்த போலீசார், தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !