உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர் மீது வழக்கு

கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர் மீது வழக்கு

ஈரோடு, விருதுநகரை சேர்ந்தவர் சுசிகலா, 30; இவர் கணவர் சுரேஷ், 34; சுசிகலாவின் உறவினர் மூர்த்தி வீடு, சித்தோடு ராயபாளையம் புதுாரில் உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து, உறவினர் வீட்டுக்கு செல்வதாக விருதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்த சுசிகலா, ராயபாளையம் புதுாருக்கு கடந்த, ௯ம் தேதி வந்தார். அவரை சுரேஷ் பின் தொடர்ந்தார். இதுபற்றி புகாரளிக்க சுசிகலா சித்தோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். பின் தொடர்ந்து வந்த சுரேஷ், தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டார். சித்தோடு போலீசார் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு சுரேஷை அனுப்பி வைத்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவும் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ