உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.20 ஆயிரம் சம்பள பாக்கியால் ஊழியர் தற்கொலை நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

ரூ.20 ஆயிரம் சம்பள பாக்கியால் ஊழியர் தற்கொலை நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு, ஆக. 24பெருந்துறை, பெரிய மடத்து பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 35; இவரின் மனைவி யோகேஸ்வரி, 34; சன் இன்ப்ரா ஈஸ்வரி இண்டஸ்ட்ரீஷ் நிறுவனத்தில் ஓராண்டாக பாலசுப்பிரமணியம் வேலை செய்தார். பணிச்சுமையால் மூன்று மாதத்துக்கு முன் பணியில் நின்று விட்டார். அவருக்கு தர வேண்டிய சம்பள பாக்கி, 20 ஆயிரம் ரூபாயை கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த, 21ம் தேதி மாலை பிச்சாண்டாம்பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு அறையில் புகுந்து கதவை தாழிட்டு கொண்டார். வீட்டில் இருந்த மனைவி யோகேஸ்வரி, ஜன்னல் வழியாக பார்த்தபோது, நைலான் கயிற்றில் பாலசுப்பிரமணியம் துாக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கினர். கயிறை அறுத்து பார்த்த போது பேச்சு, மூச்சின்றி இருந்த பாலசுப்பிரமணியத்தை பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. யோகேஸ்வரி அளித்த புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், தற்கொலைக்கு துாண்டியதாக, சன் இன்ப்ரா ஈஸ்வரி இண்டஸ்ட்ரீஷ் உரிமையாளர் யோகராஜ், ஊழியர் ரகுநாத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி