உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு

காங்கேயம்: ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதி, சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்-டனர். திருப்பூர் மாவட்டம் எல்லை பகுதியான முத்துார் அருகே உள்ளதால், திருப்பூர் எஸ்.பி., உத்தரவின்படி, காங்கேயம், ஊத்-துக்குளி, வெள்ளகோவில், ஊதியூர் போலீசார், தாலுகாவில் உள்ள அனைத்து தனி வீடுகள், தோட்டம் மற்றும் பண்ணை வீடு-களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதி தோட்டத்து வீடுகளில் தனி-யாக வசித்து வருபவர்களிடம், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி