சென்னிமலை அ.தி.மு.க., இரண்டாக பிரிப்பு; புதிய நிர்வாகிகள் நியமனம்
சென்னிமலை, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இருந்த சென்னிமலை மத்திய ஒன்றியம், அ.தி.மு.க., நிர்வாக வசதிக்காகவும், தேர்தல் பணிகளை வேகப்படுத்தவும், சென்னிமலை மேற்கு, கிழக்கு ஒன்றியம் என இரண்டாக பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளராக ஓட்டப்பாறை தங்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக ஆறுமுகம், ஒன்றிய இணை செயலாளராக மாரியம்மாள், துணை செயலாளர்களாக யசோதா சுப்பிரமணி, விஸ்வநாதன், பொருளாளராக ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகளாக சாந்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராசு, நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.* சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக ராமசாமி, இணைசெயலாளர் ராதா, துணை செயலாளர்கள் பழனியம்மாள், தம்பித்துரை, பொருளாளராக விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதிகளாக செல்வி, புதுவலசு கோவிந்தசாமி, இளங்கோ ஆகியோரை நியமித்து, கட்சி பொது செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.