உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கோவில் மலைப்பாதை சீரமைப்பு பணி; கலெக்டர் உத்தரவு

சென்னிமலை கோவில் மலைப்பாதை சீரமைப்பு பணி; கலெக்டர் உத்தரவு

சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுபிரமணிய சுவாமி கோவிலில், 6.70 கோடி ரூபாய் மதிப்பில், மலைப்பாதை சீரமைப்பு பணி, 2024 ஜூலை, 24ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வனத்துறைக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் எழுந்த மோதலால் பணி தொய்வடைந்தது. இதனால் பணியை விரைந்து நடத்தி முடிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று, சென்னிமலை அ.தி.மு.க., தரப்பில், கோவில் செயல் அலுவலரிடம் மனு தரப்பட்டது. சமீபத்தில் ஈரோட்டில் ஆய்வுக்கு வந்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, மலைப்பாதை புலிகள் நடமாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளதால், விரைவில் பணி தொடங்கும். நடப்பாண்டு இறுதிக்குள் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கலெக்டர் கந்தசாமி, மலைப்பாதையில் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை