உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு; இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு; இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு: ஈரோடு அருகே மேட்டுக்கடையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நேற்று மாலை நடந்தது. இதில் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், 260 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் 6:07 மணிக்கு துவங்கி, 7:32 மணிக்கு நிறைவு பெற்றது. கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்றார். முன்னதாக கழக பணிகளை மேற்கொள்ள ஆக்கப்பூர்வமான கருத்து, ஆலோசனை, புகார்களை மனுவாக கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. கூட்டம் துவங்கியதும் அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவனுக்கு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கை உணர்வு மிக்கவராகவும், உள்ளத்தின் எண்ணங்களை ஒளிவுமறைவின்றி உரைக்க கூடியவராகவும், மதவாத அரசியலுக்கு எதிரான ஜனநாயக போராளியாகவும், திராவிட கொள்கை உணர்வு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை