வேளாண் கண்காட்சியில் மதியம் முதல்வர் பங்கேற்பு
ஈரோடு, பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகே வரும், 11, 12ல் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு நடக்க உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு, 11ல் விமானத்தில் வரும் முதல்வர் ஸ்டாலின், அன்று காலை திருப்பூரில் திருமண நிகழ்வில் பங்கேற்கிறார். மதியம், 12:30 மணிக்கு வேளாண் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசுகிறார்.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், முத்துசாமி முன்னிலை வகிக்கின்றனர். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் காரில் மேட்டூர் செல்கிறார்.