மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
15-Nov-2025
ஈரோடு: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி, 'ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உரிமைக்கும்' எனும் கருப்பொருளுடன் கூடிய விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பின் அலுவலர்கள், பொது அமைப்புகள், பள்ளி குழந்தைகள் குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விழிப்புணர்வு பலகையில், கையெழுத்து இயக்-கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். குழந்தைகள் தொடர்பான பிரச்னை பற்றி, 1098, 181 என்ற எண்களில் தெரிவிக்க யோசனை தெரிவித்தனர்.
15-Nov-2025