மேலும் செய்திகள்
அ.தி.ம.மு.க., கொடி அறிமுகம்
11-Aug-2025
ஈரோடு:ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., 12வது மாநாடு, ஈரோட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாநில துணை தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஆதரிக்கிறது. அரசு இவர்களை அழைத்து பேச வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். துாய்மை பணி உள்ளிட்ட இதர நிரந்தர பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
11-Aug-2025