உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மீது மோதிய வேனை சிறைபிடித்த பொதுமக்கள்

கார் மீது மோதிய வேனை சிறைபிடித்த பொதுமக்கள்

காங்கேயம்: திருப்பூர், மண்ணரையை சேர்ந்த தனியார் நிறுவன வேன், சென்னிமலையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வந்தது. காங்கேயம் அருகே பெருமாள் மலை, ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி முன், நேற்று மதியம் 2:00 மணி அளவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.பின் இருக்கையில் அமர்ந்து வந்த பெண், தலையில் காயமடைந்தார். அப்பகுதி மக்கள் வேனை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காங்கேயம் போலீசார் சமாதானம் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை