துாய்மையே சேவை திட்டப்பணி ஈரோட்டில் துவக்கி வைப்பு
ஈரோடு ஈரோடு யூனியன் பிச்சாண்டாம்பாளையம் பஞ்.,ல், 'துாய்மையே சேவை-2025' திட்டத்தை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தளங்கள், பஸ் ஸ்டாண்ட், குளம், குட்டை போன்ற நீர் நிலைகள், பொது கழிப்பிடங்கள் என குப்பை அதிகம் சேரும் இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்படும். இதன்படி, சுற்றுப்புற துாய்மை விழிப்புணர்வுக்காக கலெக்டர் த8லைமையில், வேப்பம்பாளையம் குளம் பகுதியில் வடிகால், வண்ணாங்காட்டுவலசு பொது கழிப்பிடம், பாலாஜி நகர் பகுதி மண்புழு உரக்கொட்டகையில் ஆய்வு செய்து துாய்மையாக வைத்திருக்க யோசனை தெரிவித்தார்.வீடு தோறும் மின்கல வாகனத்தில் மக்கும், மக்கா குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை ஆய்வு செய்து, பொதுமக்களே அவற்றை பிரித்து வழங்க யோசனை தெரிவித்தார். பின், அங்குள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து, காலை உணவு திட்ட குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை உண்டு, சுவைத்து, சுவை குறித்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.