உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை:தென்னை விவசாயிகளை பாதுகாக்க கோரி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. பெருந்துறை -புது பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட தலைவர் அர்ஜுனன் தலைமை வகித்தார். தமிழக விவசாய சங்க முனுசாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் மாவட்ட செயலாளர் கோபிநாத் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். வெள்ளை ஈயால் காய்ந்த ஒரு தென்னை மரத்துக்கு, ௧௦ ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை