மேலும் செய்திகள்
தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு
04-Sep-2025
ஈரோடு :தமிழ் இலக்கிய படைப்பாளர்களுடன் 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில் ஈரோடு கலெக்டர் கந்தசாமி, நேற்று பங்கேற்றார். இதில் கலெக்டர் பேசியதாவது: நுால்கள் காலத்துக்கும் நிலைத்து நிற்பவை. தமிழ் இலக்கியங்களில் பெரிய அளவில் மெய் ஞானம் புதைந்துள்ளன. தமிழக அரசின் 'மாபெரும் தமிழ் கனவு', 'திருக்குறள் திருப்பணி திட்டம்' மூலம் மாணவர்களிடம் இலக்கியம், எழுத்து, வாசித்தல் போன்றவை குறித்து ஊக்கப்படுத்தப்படுகிறது. சிறிய நுால்கள் கூட மனிதர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எழுதுதல், படித்தல் ஆகியவை நம்மை ஊக்கப்படுத்தும். இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் இலக்கிய படைப்பாளர்கள் சாகித்ய அகாடமி விருதாளர் தேவிபாரதி, வா.மு.கோமு, கவுதம சித்தார்த்தன், கணியன் பாலன், சந்திரா மனோகரன், பவளசங்கரி, சென்னிமலை தண்டபாணி உட்பட, 26 பேர், பிற எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ஜோதி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Sep-2025