உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் ஆய்வு

பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் ஆய்வு

பஸ் ஸ்டாண்டில்கலெக்டர் ஆய்வுஈரோடு, நவ. 6-ஈரோடு அருகே சோலாரில், 24 ஏக்கர் பரப்பளவில், 63.௫௦ கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டின் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, 53வது வார்டு ரயில்வே காலனி உயர்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி, 56வது வார்டு ரங்கம்பாளையத்தில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.மேலும், வைராபாளையம் குப்பை கிடங்கு, பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம் மற்றும் பக்கச்சுவர் பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை