உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உ.தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பெருந்துறையில் கலெக்டர் ஆய்வு

உ.தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பெருந்துறையில் கலெக்டர் ஆய்வு

உ.தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்பெருந்துறையில் கலெக்டர் ஆய்வுபெருந்துறை, டிச. 25-'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்படி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பெருந்துறையில் நேற்று முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். சீனாபுரத்தில் வி.ஏ.ஓ., ஆலுவலகத்தில் ஆய்வு செய்தார். பிறகு சீனாபுரம் ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் குறை கேட்டறிந்தார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகம், பெருந்துறை ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்துறை கிளைகளில் ஆய்வு மேற்கொண்டார். பெருந்துறையில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கை பார்வையிட்டு, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரிகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் விபரங்களை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பெருந்துறை கிடங்கை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பெருந்துறை தாசில்தார் செல்வகுமார், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ