உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போட்டித்தேர்வு பயிற்சி 3 மையத்தில் தகுதி தேர்வு

போட்டித்தேர்வு பயிற்சி 3 மையத்தில் தகுதி தேர்வு

ஈரோடு:யு.பி.எஸ்.சி., (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,) போட்டி தேர்வுக்கு தகுதியான மாணவ,மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி தொகையுடன் பயிற்சியும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.தகுதியான மாணவ, மாணவிகளை கண்டறிவதற்கான தேர்வு செப்.,6ம் தேதி காலை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது. ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையத்தில், 260, ஈரோடு ரயில்வே காலனி கொல்லம்பாளையம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், 260, ஈரோடு சி.எஸ்.ஐ., மகளிர் பள்ளியில், 137 பேர் என, 657 பேர் மூன்று மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி உதவி தொகையுடன் வழங்கப்படும். இவர்கள் சென்னையில் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை