உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தார்ச்சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதாக புகார்

தார்ச்சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதாக புகார்

ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரியகுட்டை வீதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு வழங்கி கூறிய தாவது: பெரிய குட்டை வீதியில், 400க்கும் மேற்பட் டோர் வசிக்கிறோம். இந்த வீதியில் வசிக்கும் கூட்டுறவு துறையில் பணி செய்யும் குடும்பத்தார், அவர்களது உறவினர்கள் சிலர், அங்குள்ள சாலை, குடிநீர் பைப், மின் கம்பம் போன்றவை தங்கள் முயற்சியால், தங்களுக்காக வைக்கப்பட்டதாக கூறி, மற்றவர்கள் பயன்படுத்த தடை செய்கின்றனர். ஆம்புலன்ஸ், கார் வந்தால், அனுமதி மறுத்து தகராறு செய்கின்றனர். அவர்கள் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி