உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் கடைக்கு வாடகை நிலுவை முதல்வருக்கு புகார்; அலுவலர் பிஸி

கோவில் கடைக்கு வாடகை நிலுவை முதல்வருக்கு புகார்; அலுவலர் பிஸி

ஈரோடு: முருக பக்தர்கள் வழிபாட்டு மன்றத்தலைவர் பழனிசாமி. இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்ப-தாவது: ஈரோடு கொங்கலம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் அக்ரஹாரம் வீதியில் உள்ள ஒரு கடையில், சாகுல் அமீது செருப்பு கடை நடத்தி வருகிறார். துணிக்கடை வைப்பதாக கடையை பெற்றவர், செருப்பு கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு முறையாக வாடகை செலுத்த-வில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாகுல் அமீது கூறுகையில், ''நான் வாடகையை முறையாக கோவில் நிர்-வாகத்துக்கு செலுத்தி வருகிறேன். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்-சியால் முதல்வர் பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்'' என்றார்.கோவில் செயல் அலுவலர் திலகவதி கூறும்போது 'தற்போது நான் பிஸியாக இருப்பதால், ஆவணங்களை சரிபார்த்து விட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு விளக்கம் அளிக்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை