உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசை காட்டி மோசடி சைபர் கிரைமில் புகார்

ஆசை காட்டி மோசடி சைபர் கிரைமில் புகார்

ஆசை காட்டி மோசடிசைபர் கிரைமில் புகார்ஈரோடு, அக். 11-ஈரோடு, ரங்கம்பாளையம், ரமணி கார்டனை சேர்ந்தவர் நரேந்திரன், 45; லண்டனில் பணியாற்றி வருகிறார். ஆன்லைன் லிங்க்கில், வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி, ௯ லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதற்கு, 44 ஆயிரம் அமெரிக்க டாலர் லாபமாக கிடைத்ததாக தகவல் வந்ததால், பணத்தை முழுமையாக மீண்டும் முதலீடு செய்தார். ஆனால், பணம் இரட்டிப்பு ஆகவில்லை. ஆன்லைனில் குறிப்பிட்டிருந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் தகாத வார்த்தை பேசியுள்ளனர். ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை