தடுப்பணையில் மூழ்கி கட்டட தொழிலாளி பலி
கோபி:டி.என். பாளையம், எரங்காட்டூர் அருகே கரும்பாறையை சேர்ந்தவர் சந்தோஷ், 19; கட்டட தொழிலாளி; கடந்த, 8ம் தேதி மதியம், கரும்பாறையில் உள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய சந்தோஷ் அன்றிரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். பலியான சந்தோஷின் தந்தை சடையன் புகாரின்படி, பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.