உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டட தொழிலாளர் சங்கத்தினர் மாநாடு

கட்டட தொழிலாளர் சங்கத்தினர் மாநாடு

கோபி:தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின், கோபி ஒன்றியம் சார்பில் ஏழாவது மாநாடு கோபியில் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாதேஸ்வரன் மாநாட்டு கொடியேற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சி.பி.ஐ., மோகன்குமார் பேசினார். நல வாரியத்தில் பதிவு செய்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் 6,000 ரூபாய் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மற்றும் வருங்கால வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை