மேலும் செய்திகள்
கட்டுமான தொழிலாளர் சங்க மாநில மாநாடு
08-Sep-2025
ஈரோடு, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்க தெற்கு வட்ட நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் அனைத்து கட்டட, கட்டுமான தொழிலாளர்களுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படுவது போல, தீபாவளி போனஸாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். சொந்த வீடில்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கும் உதவித்தொகையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். ஈ.எஸ்.ஐ., மருத்துவ வசதி திட்டத்தை நலவாரியம் மூலம் செயல்படுத்த வேண்டும். 1 சதவீத நலவரியை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
08-Sep-2025