உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

ஈரோடு, ஆதி திராவிடர் நல துறையின் கீழ் இயங்கும், அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர், இடைநிலை ஆசிரியர், காப்பாளர் பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு இன்று 12, நாளை 13ல் காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடக்கிறது.பணியிட மாறுதல் கோரி, இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு மேல்நிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை