உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களை வெளியேற்ற எதிர்ப்பு பர்கூர் மலையில் ஆலோசனை

மக்களை வெளியேற்ற எதிர்ப்பு பர்கூர் மலையில் ஆலோசனை

அந்தியூர் :அந்தியூர் அருகே பர்கூர் மலை தாமரைக்கரையில், பழங்குடியின மக்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. பழங்குடியின மக்கள் சங்க தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். பர்கூர் வனப்பகுதி ஓர நிலங்களில் விவசாயம் செய்து வரும், பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களை, வன விரிவாக்கம் பெயரில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை நடந்தது. இதுகுறித்து அடுத்த மாதம், 15ம்தேதி, அனைத்து மலை கிராம மக்களையும் திரட்டி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை