மேலும் செய்திகள்
தள்ளி போகிறது புதிய பஸ் நிலைய திறப்பு விழா
26-Sep-2024
ஈரோடு, அக். 15-ஈரோடு அருகே சோலாரில், 24 ஏக்கர் பரப்பளவில், புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பஸ் ஸ்டாண்ட் திறப்பது குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் மனிஷ் தலைமை வகித்தார். போக்குவரத்து, வட்டார போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். நவம்பர் இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
26-Sep-2024