நீதிமன்ற புறக்கணிப்பு
நீதிமன்ற புறக்கணிப்புதாராபுரம், நவ. 22-ஓசூரில் வக்கீல் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து, தாராபுரத்தில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றங்களை புறக்கணித்தனர். இதனால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் செயல்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தையும், வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் புறக்கணித்தனர்.