உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியிடம் பாலியல் சீண்டல் சமையல் மாஸ்டர் கைது

சிறுமியிடம் பாலியல் சீண்டல் சமையல் மாஸ்டர் கைது

ஈரோடு, ஈரோட்டில், 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் ஆகாஷ், 42, திருமணமானவர். ஹோட்டல் சமையல் மாஸ்டர். கடந்த, 11ல் சென்னை செல்ல ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு மதுபோதையில் சென்றார். அங்கு பஸ்சுக்காக தாயுடன் காத்திருந்த, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி 1098க்கு போன் மூலம் இதுபற்றி தெரிவித்தார். குழந்தைகள் நல குழுவினர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து ஆகாஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ