கூட்டுறவு பட்டய பயிற்சி
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதி-வாளர் பிரபு அறிக்கை:தாராபுரத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான 24வது தபால் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி, வரும் மே, 9ல் துவங்குகிறது.பயிற்சியில் சேர விரும்புவோர், www.tncu.tn.gov.inஎன்கிற இணையதளத்தில், வரும், 16ம் தேதி முதல் மே, 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்-டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 17 வயது நிரம்பிய மற்றும் கூட்டுறவு நிறுவனங்-களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களும் விண்ணப்-பிக்கலாம். வயது வரம்பு இல்லை. கூட்டுறவு சங்கங்களில் பணி-புரியும் கூட்டுறவு பயிற்சி முடிக்காத, ரேஷன் கடை பணியா-ளர்கள், சங்க பணியாளர்களும் பயிற்சி பெற உள்ளதால், வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும்.