உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் வனத்தில் யானை தாக்கி தம்பதி பலி

பவானிசாகர் வனத்தில் யானை தாக்கி தம்பதி பலி

பவானிசாகர்:ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த பூதிக்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன், 75. இவரின் மனைவி துளசியம்மாள், 70, இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்தில் சிங்கமலை, வால்மொக்கை வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிப்பதற்காக நேற்று மாலை சென்றனர்.அப்போது புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை, இருவரையும் தாக்கியதில், சம்பவ இடத்தில் பலியாகினர். அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு சென்றனர்.யானையை விரட்டி விட்டு, வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தம்பதி உடல்களை மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை