குக்கர் வெடித்ததில்தம்பதியர் படுகாயம்
டி.என்.பாளையம், டிச. 18- -டி.என்.பாளையம், விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் தனலட்சுமி, 21, ராஜேந்திரன் தம்பதியினர். இவர்கள், பனியன் கம்பெனியில் வேலை செய்கின்றனர். சமையல் செய்வதற்காக, வீட்டில் உள்ள பம்ப் ஸ்டவ்வை, தனலட்சுமி பற்ற வைத்து குக்கரில் சாதம் வைத்துள்ளார்.சிறிது நேரத்தில் குக்கர் வெடித்து சிதறியது. குக்கர் வெடித்து, அடுப்பு மீது விழுந்ததில் அதுவும் தீப்பற்றி உள்ளது. இதனால் தனலட்சுமி தீயால் படுகாயம் அடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ராஜேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது.அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.