உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிபில் ஸ்கோர் ரத்து கோரி கொ.ம.தே.க., போராட்டம்

சிபில் ஸ்கோர் ரத்து கோரி கொ.ம.தே.க., போராட்டம்

ஈரோடு: தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் பயிர் கடன் பெற சிபில் ஸ்கோர் வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய, மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். கடன் பெற வங்கிகளில் தடையின்மை சான்று பெற வேண்டும் என்ற நிபந்தனையை திரும்ப பெற வலியுறுத்தி, கொ.ம.தே.க., சார்பில் ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அக்கட்சியினர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று காலை குவிந்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. பிறகு ரயில்வே ஸ்டேஷன் நுழைவு பகுதியில் சிறிது துாரம் கட்சியினர் வந்தனர். பின்னர் கைது நடவடிக்கை வேண்டாம் எனக்கூறி தாங்களாவே கலைந்து சென்றனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை என, 130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ