உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகளுக்கு கடனுதவி

விவசாயிகளுக்கு கடனுதவி

அந்தியூர்: ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை, கே-290 அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், அந்தியூர் டவுன் பஞ்.,ல், 54 விவசாயிகளுக்கு, 89.39 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர் கடன், இரண்டு சுய உதவி குழுக்களுக்கு, 4.20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார். நிகழ்வில் டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள், துணைதலைவர் பழனிசாமி, பேரூர் செயலாளர் காளிதாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ