உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகள் திறப்பால் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

பள்ளிகள் திறப்பால் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு: நாளை பள்ளிகள் திறப்பு மற்றும் சுப முகூர்த்த தினங்கள் தொடர்ந்து வருவதால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நேற்று அலை மோதியது.தமிழகத்தில் பள்ளி விடுமுறை நிறைவு பெற்று, நாளை முதல் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அத்துடன் தொடர்ச்சியாக முகூர்த்த நாட்கள் வருகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்வோர் அதிகரித்துள்ளனர்.நேற்றிரவு ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், நாமக்கல், கோவை, மதுரை, கரூர், திருச்சி, காரைக்கால், திருநெல்வேலி, நாகர்கோவில் என அனைத்து ஊர்களுக்கும் செல்லும் பஸ்களிலும் வழக்கத்தைவிட, 2 முதல், 3 மடங்கு கூட்டம் காணப்பட்டது.இதை எதிர்பார்க்காத அரசு போக்குவரத்து கழகம், குறிப்பிட்ட தொலைதுார ஊர்களுக்கு மட்டும் கூடுதலாக சில பஸ்களை திருப்பி விட்டனர். ஆனாலும், பெரும்பாலான ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிரம்பி வழிந்தன. இன்று இதைவிட கூடுதலாக கூட்டம் இருக்கும் என, போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ