உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பொறியியல் கல்லுாரியில் சி.எஸ்.ஐ.ஆர்., அதிகாரி உரை

கொங்கு பொறியியல் கல்லுாரியில் சி.எஸ்.ஐ.ஆர்., அதிகாரி உரை

ஈரோடு : பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், சி.எஸ்.ஐ.ஆர்., பொது இயக்குனரும், டி.எஸ்.ஐ.ஆர்., செயலாளருமான கலைசெல்வி சிறப்புரையாற்றினார். தனது பேச்சில் ​அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் திறன் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். நாடு முழுவதும், 37 ஆய்வகங்கள் மூலம் இயங்கி வரும், 82 ஆண்டு கால வரலாற்றில் சி.எஸ்.ஐ.ஆரின் விரிவான பங்களிப்புகளை கூறினார். இந்த பங்களிப்புகள் மரபியல், கட்டுமானம், பெட்ரோலியம், உணவு பதப்படுத்துதல், சுரங்கம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பரவியுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்., புராஜெக்ட்களில் ஹெச்.ஏ.பி.எஸ்., ஸ்லாக் சாலைகள், ரெஜுபவ் தொழில் நுட்பம், நிலையான விமான எரிபொருள் ப்ராஜெக்ட்கள் சர்வேத சதரத்துடன் செய்யப்பட்டுள்ள முக்கிய புராஜெக்ட்கள் ஆகும். கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி செல்ப் டெவெலப்மென்ட் கிளப் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி