உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிலிண்டர் வெடித்து தீ விபத்து; நகை, பணம் எரிந்து நாசம்

சிலிண்டர் வெடித்து தீ விபத்து; நகை, பணம் எரிந்து நாசம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது.சத்தியமங்கலம் அருகே, கொமராபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர். இவரது மனைவி சரண்யா. மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், சரண்யா தனது வீட்டில் உள்ள பாட்டிக்கு, உடல் நலம் சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் மதியம் மணிகண்டனின் வீடு திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த எட்டு பவுன் நகை, 95 ஆயிரம் ரூபாய், பிரிட்ஜ், பீரோ, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை